மீண்டும் கேலி கிண்டலுக்கு ஆளான கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் ஒரு படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்த பிறந்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிகர் சுரேஷின் மகள் ஆவார். தமிழில் முதன் முறையாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் “ரஜினிமுருகன்” திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் அவருடன் காதல் காட்சிகள், காமெடி காட்சிகள் என்று அனைத்திலும் கலக்கி இருப்பார்.

என்ன லாஸ்லியா இப்படி மோசமாகிட்டே போறீங்க?? வைரலாகும் புகைப்படம்!!

இதனால் தனது முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் உருவாக்கினர். அதன் பிறகு தொடர்ச்சியாக தனது கவனத்தினை தமிழ் திரைப்படங்களில் நடிப்பதில் செலுத்தினார். இதனை அடுத்து இவருக்கு தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வாய்ப்புகளை நன்றாக கீர்த்தி சுரேஷ் பயன்படுத்தி கொண்டார் என்றே கூறலாம். தொடர்ச்சியாக அனைத்து படங்களிலும் நடித்தார்.

இவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக பார்க்கப்படுவது “மகாநதி” திரைப்படம் தான். பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதை தான் இந்த திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையினை மிகவும் அதிகப்படியாகவே குறைத்துள்ளார்.

அதே போல் வேற லெவல் நடிப்பின் காரணமாக இவருக்கு திரையுலகின் மத்தியில் பெரும் மதிப்பு மற்றும் பேர் உருவானது. தற்போது தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்த பொது முடக்கத்தின் போது இவர் தனது உடல் எடையினை முற்றிலுமாக குறைத்தார்.

இதனால் ரசிகர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதே போல் பழையபடி மாறும்படியும் அனைத்து தரப்பு ரசிகர்களும் எடுத்துரைத்தனர். இதனை அடுத்து தற்போது தனது உடல் எடையினை கூட்டி வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க, பட நிகழ்ச்சி ஒன்றிற்காக தனக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடையில் உள்ள சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரல்கை வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here