‘போக போக தேஞ்சுகிட்டே இருக்கீங்களே’ – மீண்டும் கிண்டலுக்கு ஆளான கீர்த்தி சுரேஷ்!!

0

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகின்றது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

முன்னணி நடிகையாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் நடிகை தான் கீர்த்தி சுரேஷ். இவர் முதன் முதலாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் “ரஜினி முருகன்” திரைப்படத்தில் தான் நடித்தார். இவர் அந்த திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலமாக தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தினை ஏற்படுத்தி கொண்டார்.

வனிதாவுடன் ஜோடி சேரும் சமுத்திரக்கனி – வைரலாகும் ‘அந்தகன்’ பட அப்டேட்!!

இப்படியாக இருக்க தொடர்ந்து இவர் முன்னணி நடிகர்களுடன் பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்து விட்டார். நடிகர் விஜய்யுடன் மட்டுமே இவர் இரண்டு திரைப்படங்களில் நடித்து விட்டார். அதற்கு பின்பாக இவருக்கு மார்க்கெட் சற்று சரிய தொடங்கியது. அப்போது தான் அவருக்கு “மகாநதி” திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த திரைப்படத்திற்கு இவர் கமிட் ஆன போது பலரும் இவரை கிண்டல் செய்துள்ளனர். காரணம், அந்த திரைப்படம் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதை ஆகும்.

ஆனால், இந்த திரைப்படத்தில் கீர்த்தி தனது அசத்தலான நடிப்பினை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here