ரம்யா பாண்டியன், ஷிவானிக்கு டஃப் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்…!அவரே வெளியிட்ட வீடியோ!!!

0

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் யோகாசன வீடியோவை வெளியிட்டு உள்ளார். மேலும் அந்த வீடியோவில் தன்னுடைய உடலை வில்லாக வளைத்து பல யோகா ஆசனங்களை செய்து அசத்தி உள்ளார்.

திரையில் ஒரு குழந்தை நட்சத்திரமாக வந்து அதன் பிறகு பல முன்னனி நடிகர்களுடன் நடித்து பெரும் புகழ் பெற்றவர்கள் பலர். அதில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள். மலையாள திரையில் அறிமுகமாகி அதன் பிறகு பல மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் அவருக்கு முதல் படமாக இது என்ன மாயம் என்ற படம் தான். அதன் பிறகு விஜய், சூர்யா, தனுஷ்  உள்ளிட்ட  பல முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

மேலும் அவர் நடிப்பில் வெளியான சர்க்கார்,ரெமோ மற்றும் ரஜினி முருகன் போன்ற படங்கள் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான மகாநதி படம் பல விருதுகளை தட்டி சென்றது. இந்நிலையில் இவர் தற்போது ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி போல பல யோகாசனங்களை செய்து அசத்தி உள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். மேலும் இந்த வீடியோ பல லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here