கயல் சீரியல் நாளுக்கு நாள் அதிரடியான பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் பிரபுவை ஆனந்தி கயல் தான் கொலை செய்தார்கள் என்ற விஷயம் தெரிந்து எழிலின் அம்மா வீட்டில் வந்து ருத்ர தாண்டவம் ஆடுகிறார். இப்படி இருக்கையில் இந்த சீரியலின் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது கயல் எழிலின் அம்மாவிடம் நான் உங்க பையன கல்யாணம் பண்ண ஆசைப்படுகிறேன் என்று சொல்கிறார். இதை கேட்டு அவர் ஆத்திரத்தில் எங்க வீட்டுப் பையனையே கொன்னுட்டு நீ எனக்கு மருமகளா வருவேன்னு கனவுல கூட நெனச்சு பாக்காத. நிச்சயம் நான் இந்த கல்யாணத்தை நடக்க விடமாட்டேன் என சவால் விடுகிறார். இதைக் கேட்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.