வில்லனாக அறிமுகமாக இருக்கும் கயல் பட நாயகன் – பிரபல இயக்குனருடன் புதிய படத்திற்கான ஒப்பந்தம்!!

0
வில்லனாக அறிமுகமாக இருக்கும் கயல் பட நாயகன் - பிரபல இயக்குனருடன் புதிய படத்திற்கான ஒப்பந்தம்!!
வில்லனாக அறிமுகமாக இருக்கும் கயல் பட நாயகன் - பிரபல இயக்குனருடன் புதிய படத்திற்கான ஒப்பந்தம்!!

கயல் படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமான சந்திரன் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மற்றும் இந்த திரைப்படத்தில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்பதற்கான தகவலும் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகளை மூட உத்தரவு – சுகாதாரத்துறையினர் அதிரடி நடவடிக்கை!!

வில்லனாக அறிமுகமாகும் சந்திரன்:

பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட கயல் திரைப்படத்தின் மூலமாகவே நாயகனாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் சந்திரன். திரையுலகில் நுழைவதற்கு முன்பாகவே சில குறும்படங்கள், இசை வீடியோக்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் முக்கியமாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

வில்லனாக அறிமுகமாக இருக்கும் கயல் பட நாயகன் - பிரபல இயக்குனருடன் புதிய படத்திற்கான ஒப்பந்தம்!!
வில்லனாக அறிமுகமாக இருக்கும் கயல் பட நாயகன் – பிரபல இயக்குனருடன் புதிய படத்திற்கான ஒப்பந்தம்!!

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

இறுதியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் திரையரங்கங்களில் மட்டும் அல்லாமல் ஓடிடி தளத்திலும் மிக பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த திரைப்படத்தில் நாயகனாக நடித்த சிம்புவை காட்டிலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பே மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதனால் புதிதாக இயக்க உள்ள இந்த திரைப்படத்திலும் சந்திரன் கதாபாத்திரம் மிக பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அசோக் செல்வன் இப்படத்தில் ஹீரோவாகவும், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் மற்றும் ரியா சுமன் என மூன்று நாயகிகளும் நடிக்கிறார்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here