கமலின் அந்த படம் போல் அடிவயிறு குலுங்க குலுங்க சிரிப்பீங்க.., உத்திரவாதம் கொடுத்த காசேதான் கடவுளடா படக்குழுவினர்!!!

0
கமலின் அந்த படம் போல் அடிவயிறு குலுங்க குலுங்க சிரிப்பீங்க.., உத்திரவாதம் கொடுத்த காசேதான் கடவுளடா படக்குழுவினர்!!!
கமலின் அந்த படம் போல் அடிவயிறு குலுங்க குலுங்க சிரிப்பீங்க.., உத்திரவாதம் கொடுத்த காசேதான் கடவுளடா படக்குழுவினர்!!!

தமிழ் திரையில் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் தான் நடிகர் சிவா. இவர் ”சென்னை 600028” படத்தில் முக்கிய நாயகனாக நடித்து சிறந்த நடிகருக்கான விருதை பெற்றிருந்தார். இதன் பிறகு இவர் அடுத்தடுத்து பல படங்களில் இவரது நகைச்சுவை உணர்வு கலந்த ஹீரோயிசத்தை காட்டி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இவர் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் ”காசே தான் கடவுளடா” படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 24 ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இப்படம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்துள்ளது. இதில் கலந்து கொண்ட சிவா சில வார்த்தைகள் கூறியுள்ளார். அதாவது இப்படம் ஒரு பெரிய படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள நிலையில், இதை சிறப்பாக நடித்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்து வந்தது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நாளை மீண்டும் தாக்கல்., முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!

மேலும் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என கூறியுள்ளார். இவரை தொடர்ந்து பேசிய இயக்குனர் கண்ணன், தான் இயக்கிய தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் போன மாதம் திரைக்கு வந்த நிலையில் தற்போது இந்த மாதம் என்னுடைய அடுத்த படம் திரைக்கு வர உள்ளது. இப்படம் முற்றிலும் மக்களை என்டர்டைன் செய்யும் என நம்புகிறேன். மேலும் இப்படம் உலகநாயகனின் ‘பம்மல் கே சம்பந்தம்’ படத்தை போல ஜாலியான படமாக இருக்கும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here