செம்பருத்தி ஹீரோ கார்த்திக் ராஜ் சீரியலில் மாற்றம்., இனி இவருக்கு பதில் இவர் தான்! லீக்கான அப்டேட்!!

0
செம்பருத்தி ஹீரோ கார்த்திக் ராஜ் சீரியலில் மாற்றம்., இனி இவருக்கு பதில் இவர் தான்! லீக்கான அப்டேட்!!
செம்பருத்தி ஹீரோ கார்த்திக் ராஜ் சீரியலில் மாற்றம்., இனி இவருக்கு பதில் இவர் தான்! லீக்கான அப்டேட்!!

செம்பருத்தி புகழ் கார்த்திக் ராஜ் நடித்து வரும் கார்த்திகை தீபம் என்ற சீரியலில், நடிகர்களுக்கான மாற்றம் குறித்த ஒரு தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.

உறுதியான தகவல்:

ஜீ தமிழில் செம்பருத்தி என்ற தொடரில், ஆதி என்ற பாத்திரத்தில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகர் கார்த்திக் ராஜ். இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறிய இவர், சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆரம்பத்திலேயே இந்த சீரியலில், இவருக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இந்த சீரியல் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த தொடரில் இவருக்கு அம்மாவாக இதற்கு முன், நடிகை அஞ்சு அரவிந்த் நடிப்பதாக சொல்லப்பட்டது.

சந்திரமுகியால என வாழ்க்கையே திசை மாறிடுச்சு., என் அம்மா இதை எதிர்த்தாங்க! மனம் திறந்த பொம்மி!!

ஆனால் இதுவரை இவருக்கான என்ட்ரி காட்டப்படவில்லை. இவருக்கு பதிலாக கார்த்திக் அம்மாவாக மீரா கிருஷ்ணன் நடித்து வருகிறார். இதை வைத்துப் பார்க்கும்போது, இனிமேல் சீரியலில் அஞ்சு அரவிந்த் என்ட்ரி இருக்க வாய்ப்பில்லை என்றும், மீரா தான் தொடர்ந்து இதில் நடிப்பார் என்பதும் உறுதியாகியுள்ளது. இது குறித்த, அதிகாரப்பூர்வ தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.