
சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் புதுமுக நடிகைகள் தங்களது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்குக்கு ஜோடியாக தீபா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் என்ற ஆர்த்திகா. இவர் தமிழில் நடிக்கும் முதல் தொடரிலே ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல தொடர்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
இப்படி சின்னத்திரையில் கலக்கி வரும் ஆர்த்திகாவுக்கு விரைவில் திருமணம் நடக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆர்த்திகா நீண்ட நாள் ஒருவரை காதலித்து வந்துள்ளாராம். தற்போது அவருடனே வரும் நவம்பர் 6ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் தற்போது வரை ஆர்த்திகா திருமணம் செய்யவிருக்கும் மாப்பிள்ளை குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை குறிப்பிடத்தக்கது.