கார்த்தியின் விருமன் படத்துக்கு வந்த புதிய சிக்கல் – முதல் படமே இப்படியா? கதறும் சங்கர் மகள் அதிதி!!

0
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில், உருவாகிவரும் விருமன் படத்தின் கதை தன்னுடையது என, பிரபல உதவி இயக்குனர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

பரபரப்பு புகார்:

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில், சிறந்த கிராமத்து படமாக உருவாகிவரும் திரைப்படம் விருமன். இயக்குனர் ஷங்கரின்  இரண்டாவது மகள் அதிதி சங்கர், இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார். படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த பின், வருகிற ஜூனில் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால், தற்போது இந்த படத்திற்கு புதிய பிரச்சனை ஒன்று உருவாகியுள்ளது.
கார்த்தியின் விருமன் படத்துக்கு வந்த புதிய சிக்கல் – முதல் படமே இப்படியா? கதறும் சங்கர் மகள் அதிதி!!
அதாவது விருமன் படத்தின் கதை, தன்னுடையது என்று பிரபல உதவி இயக்குனர் ஒருவர், எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதனால், இந்த படம் திட்டமிட்டபடி வெளியாவதில்  புதிய சிக்கல் எழுந்துள்ளது. இந்த நிலையில், நடிகர் கார்த்தி தற்போது சர்தார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதேபோல் படத்தின் நாயகி அதிதி, சிம்புவுடன் இணைந்து கொரோனா குமார் படத்தில் நடித்து வருகிறார். தனது முதல் படமே இப்படி சர்ச்சையில் சிக்கியுள்ளதே என, அதிதி புலம்பி  வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here