வருமான வரி கணக்கு வழக்கு – கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு!!

0

ரூ.7.37 கோடி வருமான வரி கணக்கில் இருந்து கார்த்தி சிதம்பரம் விடுதலை செய்யப்பட்டார். சொத்து விற்ற பணம் பற்றிய வருமான வரி தாக்கல் செய்யாத வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி விடுதலை செய்யப்பட்டனர்.

கார்த்தி சிதம்பரம்

மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன், சிவகங்கையின் எம்பி கார்த்தி சிதம்பரம். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் 2015ம் ஆண்டு சென்னை முட்டுக்காடு பகுதில் உள்ள நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளார். கோடிக்கணக்கில் விற்பனை செய்தும் வருமான வரித்துறைக்கு வரி கட்டவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்யும்போது ரூ.7.37 கோடி பணம் கணக்கில் காட்டப்படாமல் இருந்ததாக தெரிவித்தனர். அதனால் 2018ம் ஆண்டு வருமான வரித்துறையினரால் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி கார்த்தி மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னையில் உள்ள எம்பிக்கள் எம்எல்ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி கார்த்தி சார்பில் மனுத்தாக்கல் அளித்தனர் ஆனால் நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

கடலுக்கு அடியில் இருந்தாலும் எளிதாக தொடர்பு கொள்ளலாம் – BSNL இன் அறிமுக திட்டம்!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வருமான வரித்துறை வழக்கு பதிவு செய்யும் முன்னரே அவர்கள் கைது செய்யப்பட்டனர், இது செல்லாது என கூறி கார்த்தி சிதம்பரத்தையும், ஸ்ரீநிதி கார்த்தியையும் விடுதலை செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here