கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்கவுள்ள படக்குழுவினர் – வைரலாகும் போஸ்டர்!!

0

நடிகர் கார்த்தி தற்போது பி.எஸ். மிருதன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஓப்பந்தமாகியுள்ளார். அந்த திரைபடத்தின் படப்பிடிப்பு ஜனவரி 6ஆம் தேதியில் துவங்கவுள்ளதாகவும், யார் யார் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளனர் என்பதற்கான தகவலும் வெளியாகியுள்ளது.

சர்தார் திரைப்படம்

தற்போது நடிகர் கார்த்தி இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டிற்காக தயாராக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக கார்த்தி பி.எஸ். மிருதன் இயக்கத்தில் சர்தார் என்னும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது இந்த திரைப்படம் குறித்தான தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் மற்றும் இந்த திரைப்படத்திற்கான போஸ்டர் வெளியாகியுள்ளது.

சர்தார் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 6 ஆம் தேதியில் இருந்து துவங்க உள்ளனர். இந்த திரைப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், ஆக்சன் திரில்லர் திரைப்படமாகவே இந்த திரைப்படம் உருவாக உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். கார்த்திக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்க உள்ளார் மற்றும் இந்த திரைப்படத்தில் ரஜித்தா விஜயன் மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். திரைப்படத்தின் போஸ்டர் வெளியான நிலையிலே மக்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here