Wednesday, June 23, 2021

மத்திய அரசை எதிர்க்கும் இசை கலைஞர் – தெறிக்கவிட்ட நீதிமன்றம்

Must Read

பிரபல கர்நாடக இசை பாடகரான டி.எம்.கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு சமீபத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்த புதிய விதிகளை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இது குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டி.எம்.கிருஷ்ணா:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்றிய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்து புதிய விதிகளை அறிவித்தது. இது குறித்து பல்வேறு தரப்பு எதிர்ப்புகள் வந்த நிலையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதில் முக்கியமாக இந்திய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரான தகவல்கள் சமூகவலைதளங்களில் பகிரப்படுகிறது.

எனவே அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், இந்தப் பதிவுகளை யார் பதிவிடுகிறார்களோ அவர்களுடைய விவரங்களை அரசு கேட்டால் கொடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களுக்கு விதிகள் உருவாக்கப்பட்டிருந்தது.

இது குறித்து பலர் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில் பிரபல கர்நாடக இசை பாடகரான டி.எம்.கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள கற்பனை சுதந்திரத்தை மத்திய அரசின் புதிய விதிகள் தணிக்கை செய்யக் காரணமாக அமைந்துள்ளது எனவும், தனி உரிமையை பாதிக்கும் வகையில் அவை அமைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி மனுவுக்கு 3 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்குத் ஒத்திவைத்தனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் சர்ச்சை – நடிகை வெளியிட்ட பதிவு!!!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாகவும் உச்ச கட்ட நட்சத்திரமாகவும் வலம் வருபவர் தளபதி விஜய்.இவர் படம் வந்தாலே ரசிகர்களுக்கு ஒரு பெரிய கோலாகலம் தான். ஒரு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -