டெல்லியை தொடர்ந்து இந்த மாநிலத்தில் ஊரடங்கு – பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்!!

0

நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் முடிய உள்ள இரவு நேர ஊரடங்கை நீட்டித்தும், பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தும் அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

கூடுதல் கட்டுப்பாடுகள் அமல் :

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரம் எடுக்க தொடங்கியுள்ளது. இதனால், மத்திய பிரதேசம், டெல்லி, கோவா, உத்தரபிரதேசம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் வருகிற 7ம் தேதி நிறைவடைய இருந்த இரவு நேர ஊரடங்கு, அடுத்த 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

நடக்கவே முடியாத நிலையில் விஜய் டிவி DD.. வீல் சேர்-ல் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

இது மட்டுமல்லாமல், கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நகரில் வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் கிழமை காலை 5 மணி வரை வார இறுதி முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்றும், மற்ற மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here