கொரோனா ஊரடங்கு ஜூன் 14 வரை நீடிப்பு… அதிகரிக்கும் தொற்றால் மாநில அரசு முடிவு!!!

0

கர்நாடகா அரசு தற்போது அம்மாநிலத்தில் உள்ள ஊரடங்கை ஜூன் 14 ஆம் தேதி வரை நீடித்துள்ளது. தொடர்ந்து தொற்று பரவலின் வேகமும், இறப்பு விகிதமும் அதிகரித்து வருவதால் மாநில அரசு ஊரடங்கை நீடித்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கர்நாடகாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு, வரும் ஜூன் 7 ஆம் தேதி வரை போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா, இரண்டாம் அலையில் உயிர் பலி எண்ணிக்கை அதிகமாகியுள்ளன. செப்டம்பர், அக்டோபரில் 3ம் அலை ஆரம்பிக்கவுள்ளதாகவும், குழந்தைகளை தான் அதிகம் பாதிக்கும் எனவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தனர்.

மூன்றாம் அலை குறித்து ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைகள் வழங்க, நாராயணா இருதாலயா நிறுவனர் தேவிபிரசாத் ஷெட்டி தலைமையில், நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது.இந்த குழுவுடன், பெங்களூரு குமாரகிருபா சாலையில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில், முதல்வர் எடியூரப்பா, நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று பெரும்பாலான அமைச்சர்கள் முதல்வரை வலியுறுத்தினர்.

இந்நிலையில் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தால் மேலும் ஜூன் 30 ஆம் தேதி வரையும் கூட ஊரடங்கு நீடிக்கப்படலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here