அரசு ஊழியர் போராட்டம் எதிரொலி : சம்பளத்தை 17% உயர்த்த முடிவு! முதல்வர் பிறப்பித்த உத்தரவு!!

0
அரசு ஊழியர் போராட்டம் எதிரொலி : சம்பளத்தை 17% உயர்த்த முடிவு! மாநில அரசு உத்தரவு!!
அரசு ஊழியர் போராட்டம் எதிரொலி : சம்பளத்தை 17% உயர்த்த முடிவு! மாநில அரசு உத்தரவு!!

பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஊதிய உயர்வு போன்ற கோரிக்கையில் வலியுறுத்தி போராடி வந்த, அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சர்ப்ரைஸுகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.

அரசு அதிரடி :

மத்திய அரசு ஊழியர்களுக்கு, 7வது ஊதியக்குழு கமிஷன் இன்று முதல் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இதனை வலியுறுத்தி சில மாநில அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கர்நாடக அரசு ஊழியர்கள், 7வது ஊதியக் குழுவை அமலாக்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஊழியர்களின் இந்தப் போராட்டத்தை கருத்தில் கொண்ட, பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது. அதாவது ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 17% உயர்வை கொண்டு வருவதாகவும், பங்களிப்பு பென்ஷனில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறுவது குறித்து ஆராய கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழுவை அமைப்பதாகவும் அறிவித்துள்ளது.

11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வர்கள் கவனத்திற்கு., மார்ச் 3ம் தேதி முதல் ஹால் டிக்கெட் வெளியீடு!!

இதனால் மகிழ்ச்சி அடைந்த ஊழியர்கள், இது சார்ந்த எழுத்துப் பூர்வ உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அது மட்டுமில்லாமல், தங்களின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்ததால், இதை வாபஸ் வாங்குவதாகவும் அறிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here