மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் – அடுத்த கட்ட போராட்டத்தில் அரசு ஊழியர்கள்! கர்நாடகாவில் பரபரப்பு!!

0
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - அடுத்த கட்ட போராட்டத்தில் அரசு ஊழியர்கள்! கர்நாடகாவில் பரபரப்பு!!
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - அடுத்த கட்ட போராட்டத்தில் அரசு ஊழியர்கள்! கர்நாடகாவில் பரபரப்பு!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி, அரசுக்கு எதிராக கர்நாடகா பெலகாவி பகுதியில் அரசு ஊழியர்கள் நேற்று முதல் மாவட்ட அளவிலான பேரணியை தொடங்கியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மீண்டும் போராட்டம் :

அரசு ஊழியர்களுக்கு இதுவரை அமலில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, கடந்த 2006 முதல் சிபிஎஸ் எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. அரசின் இந்த திட்டத்திற்கு எதிராக, பல மாநிலங்களில் அரசு ஊழியர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநில அரசு ஊழியங்கள், 2006 ஏப்ரல் 1ம் தேதிக்குப்பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களின் ஓய்வுரிமையை பறிக்கும் இந்தத் திட்டத்தை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த இதனை, தங்களால் நீக்க முடியாது என மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. இதனால் பொறுமை இழந்த அரசு ஊழியர்கள், கர்நாடகாவின் பெலகாவி பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடி அரசுக்கு எதிராக மாவட்ட அளவில் பேரணி நடத்தினர்.

இந்த சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! அரசு தரப்பு மகிழ்ச்சி!!

விரைவில் அடுத்த கட்ட போராட்டத்தில் குதிக்க உள்ளதாக, மாநில அரசு ஊழியர் சங்க தலைவர் சாந்தாராம் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து தங்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கர்நாடகா அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here