குடும்ப தலைவிகளுக்கு மாத உதவித்தொகை…, ஆகஸ்ட் 15 முதல் அமல்…, முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

0
குடும்ப தலைவிகளுக்கு மாத உதவித்தொகை..., ஆகஸ்ட் 15 முதல் அமல்..., முதல்வர் அதிரடி அறிவிப்பு!!
குடும்ப தலைவிகளுக்கு மாத உதவித்தொகை..., ஆகஸ்ட் 15 முதல் அமல்..., முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, காங்கிரஸ் கட்சியானது குடும்ப தலைவிகளுக்கு பயனாளிக்கு வகையில் பல வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதாவது, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படுவதுடன், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சமீபத்தில் நடந்த இந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், கர்நாடகாவின் முதலமைச்சராக சித்தராமையா பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றவுடன், தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக விரைவில் நிறைவேற்றுவதாக அறிவித்திருந்தார். இதன்படி, வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 ஊக்கத்தொகை வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

மேலும், ஜூன் 15ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை இந்த ரூ.2000 ஊக்கத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தான், கர்நாடகா மாநில அரசு அகவிலைப்படியை 31%-லிருந்து 35%-ஆக உயர்த்தியதுடன் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here