மகளிர் இலவச பயணத்திற்கு புது ரூல்ஸ்.., இனி இது கட்டாயம்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

0
மகளிர் இலவச பயணத்திற்கு புது ரூல்ஸ்.., இனி இது கட்டாயம்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!
மகளிர் இலவச பயணத்திற்கு புது ரூல்ஸ்.., இனி இது கட்டாயம்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

கர்நாடக முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்ற பிறகு, தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை உடனுக்குடன் செயல்படுத்துவதற்கான அரசாணையையும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் ஊக்கத் தொகையை ஆகஸ்ட் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதன் தொடர்ச்சியாக, சக்தி திட்டத்தின் கீழ் மாநில முழுவதும் உள்ள அரசு பஸ்களில் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்கள் இலவசமாக வரும் ஜூன் 11ம் தேதி முதல் பயணிக்கலாம் என்றும் அறிவித்தார். தற்போது, இந்த இலவசம் பயணம் தொடர்பான அரசாணையை முதல்வர் வெளியிட்டுள்ளார். இதில், கர்நாடகாவில் உள்ள அரசு பேருந்துகளுக்கு மட்டும் இந்த இலவசப் பயணம் பொருந்துமே தவிர, வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பமாக இருக்கும் காவியாவை சந்தேகிக்கும் பார்த்திபன்.., அதிர்ச்சிகளுடன் ஈரமான ரோஜாவே 2 சீரியல்!!

மேலும், அரசு பேருந்துகளில் இலவசமாக பெண்கள் பயணம் செய்வதற்காக, கர்நாடக அரசு சிறப்பு ஏற்பாட்டையும் செய்துள்ளது. அதாவது, அரசின் அதிகாரப்பூர்வ சேவா சிந்து இணையதளத்தின் மூலம், பயனாளிகளிடம் விண்ணப்பம் பெறப்பட்டு சக்தி ஸ்மார்ட் கார்டுகளை அடுத்த 3 மாதத்திற்குள் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணிக்கலாம். அதுவரையிலும், பெண்கள் புகைப்படம் மற்றும் முகவரியுடன் கூடிய மத்திய- மாநில அடையாள அட்டைகளை காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here