கர்நாடகா தேர்தலில் வெற்றி வாகை சூடிய காங்கிரஸ் கட்சி., எத்தன தொகுதி தெரியுமா? முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!!

0
கர்நாடகா தேர்தலில் வெற்றி வாகை சூடிய காங்கிரஸ் கட்சி., எத்தன தொகுதி தெரியுமா? முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!!
கர்நாடகா தேர்தலில் வெற்றி வாகை சூடிய காங்கிரஸ் கட்சி., எத்தன தொகுதி தெரியுமா? முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மே 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு 73.91 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்து இருந்தனர். இத்தேர்தலில் ஆளும் கட்சி பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் என 3 பெரிய கட்சிகளும் மோதுவதால் மும்முனை போட்டி நிலவுவதாக கருத்து தெரிவித்து வந்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

எனவே இந்தியா முழுவதும் எதிர்பார்த்த இத்தேர்தலின் வாக்குபதிவுகள் 36 மையங்களில் இன்று (மே 13) எண்ணப்பட்டது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் – 136 இடத்திலும், பா.ஜ.க. – 64 இடத்திலும், ஜனதா தளம் – 20 இடத்திலும், இதர கட்சிகள் – 4 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்று கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

இலவச கல்வி திட்டத்தில் இந்த மாணவர்களின் சேர்க்கை 25% மட்டும் தான்.., தனியார் பள்ளிகள் அதிரடி!!

இதையடுத்து வெற்றி வாகை சூடிய காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். அதேபோல் கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க. 64 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி அடைந்ததால் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here