ஜூன் 11ம் தேதி முதல் பெண்களுக்கு இது இலவசம்.., அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0
ஜூன் 11ம் தேதி முதல் பெண்களுக்கு இது இலவசம்.., அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!!
ஜூன் 11ம் தேதி முதல் பெண்களுக்கு இது இலவசம்.., அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!!

சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக ஆட்சியை பிடித்தது. நடந்த இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெறுவதற்கு தேர்தல் அறிக்கை முக்கிய காரணமாக இருந்தது. அதில் இளைஞர்களுக்கு நிதி உதவி, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000, வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட பல அறிவிப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த வாக்குறுதிகள் எல்லாம் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே முடிவு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி கொடுத்தது. அதன்படி, வருகிற ஜூன் 11ம் தேதி முதல் கர்நாடகாவில் இயங்கும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். மேலும் ஆகஸ்ட் 15 ம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here