Friday, May 14, 2021

தனுஷின் கர்ணன் திரைப்படத்தின் டீஸர் தேதி வெளியீடு – படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!!

Must Read

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ படத்தின் டீசர் இம்மாதம் வெளியிடப்படும் என படக்குழுவிடமிருந்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

கர்ணன் டீசர்

‘பரியேறும் பெருமாள்’ என்ற வெற்றிப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகியுள்ளது ‘கர்ணன்’ திரைப்படம். இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ், நடிகை ராஜிஷா, யோகி பாபு, கௌரி கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முன்னதாக இத்திரைப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி அதிகபட்ச பார்வையாளர்களை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள், தயாரிப்பு வேலைகள் எல்லாம் முடிவுற்ற நிலையில் இப்படம் வெளியாவதற்கு சிக்கல்கள் இருந்து வந்தது. கொரோனா அச்சம் காரணமாக இத்திரைப்படத்தை ஓடிடியில் திரையிடுவதற்கும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தது.

நீங்களும் ஒன்னு கூடிட்டீங்களா?? பாரதி கண்ணம்மாவில் வெண்பாவும், அஞ்சலியும் செஞ்ச காரியத்தை பாருங்க!!

பின்னர் வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் கர்ணன் படத்தின் டீசர் வரும் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்புகள் கிடைத்துள்ளது. இது குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ணன் படத்தின் போஸ்டர் ஒன்றை பதிவிட்டு கர்ணன் புறப்பாடு என குறிப்பிட்டு தேதியையும் பதிவு செய்துள்ளார். அந்த பதிவை காண இங்கே கிளிக் செய்யவும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

இந்தியாவில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதத்தில் 216 கோடி தடுப்பூசிகள் -நிதி ஆயோக் அறிக்கை!!

இந்தியவில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் வருகிற ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதங்களில் உற்பத்தி அபாரமாக அதிகரிக்கும் என்று...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -