என்னடா தனுஷுக்கே வந்த சோதனை – “கர்ணன்” படத்தின் மீது வழக்கு!!

0

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் கர்ணன். இந்த படத்தின் பாடல்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியாகியது. தற்போது இந்த படம் வெளியாவதில் சற்று சிக்கல் எழுந்துள்ளது போல் தெரிகிறது.

கர்ணன்

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் படம் தான் கர்ணன். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் 9ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த்தனர். இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் சில தினங்களுக்கு முன்பு அடுத்தடுத்து வெளி வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவை அனைத்தும் ரசிகர்கள் கவரும் வகையில் இருந்தது. மேலும் இந்த படத்தின் ‘கண்டா வர சொல்லுங்க’ என்னும் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று புல்லட் பிரபு என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் ஐகோர்ட் கிளையில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து உள்ளார்.

கவர்ச்சியில் புயலில் களம் இறங்கிய ஷிவானி – கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!

அதில் அவர் கூறியதாவது, இந்த படத்தில் இருந்து வெளியான ‘பண்டாரத்தி புராணம்’ என்னும் பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த பாடலில் “பண்டாரத்தி என் சக்காளத்தி” என்பது போன்ற வரிகள் இடம்பிடித்துள்ளதால் இந்த படத்தினை தடை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here