பள்ளி வினாத்தாளில் நடிகை கரீனா கபூரை பற்றிய கேள்வி – நெட்டிசன்கள் கடும் விமர்சனம்!!

0

பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மேல் ஒரு தனி ஈர்ப்பு மக்களுக்கு உண்டு. ஆனால் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் சினிமா ஆர்வம் கொண்டு இருந்தால் அது அவர்களின் படிப்பை தான் பாதிக்கும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால் தற்போது தனியார் பள்ளி ஒன்று நடத்திய தேர்வில் ஹிந்தி நடிகை கரீனா கபூர் பற்றி எழுந்த கேள்வி அனைவர்க்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வட இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் உள்ள அகாடெமிக் ஹைட்ஸ் என்ற தனியார் பள்ளி ஆறாம் வகுப்பு கேள்வித்தாளில் கரீனா கபூரின் மகனின் முழு பெயர் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டு உள்ளது.

இந்த கேள்விக்கு கடும் சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து அம்மாவட்ட கல்வி அதிகாரி சஞ்சீவ் பால்ராவ், ‘இது குறித்து அப்பள்ளியிடம் விளக்கம் கேட்டுள்ளேன். பிறகு தான் உயர் அதிகாரிகளின் உத்தரவின் படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து அப்பள்ளி இயக்குனர் கூறுகையில் மாணவர்களின் பொது அறிவுத்திறனை மேம்படுத்த இது போன்ற கேள்வி கேட்கப்பட்டது என பதில் கூறியுள்ளார். இவரின் இந்த பதிலும் தற்போது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here