காரைக்குடி சிக்கன் கோலா உருண்டை குழம்பு – ஒரு தட்டு சோறும் ஒரு நிமிடத்தில் காலியாகும்!!

0
காரைக்குடி சிக்கன் கோலா உருண்டை குழம்பு - ஒரு தட்டு சோறும் ஒரு நிமிடத்தில் காலியாகும்!!
காரைக்குடி சிக்கன் கோலா உருண்டை குழம்பு - ஒரு தட்டு சோறும் ஒரு நிமிடத்தில் காலியாகும்!!

நம்மில் பலருக்கு அசைவ உணவுகள் என்றால் கொள்ளை பிரியம். சிக்கன், மட்டனில் பல விதமான சுவையான டிஷ்கள் செய்யலாம். ஆனால் நம்மில் பலரோ அதே குழம்பு, கிரேவி, வறுவல் என அரைத்த மாவையே அரைத்து கொண்டிருப்போம். எனவே இந்த பதிவில் பெரும்பாலனோர்களுக்கு தெரியாத அதே சமயம் சுவையான காரைக்குடி பேமஸ் சிக்கன் கோலா உருண்டை குழம்பு ரெசிபி பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஆத்தாடி.., அந்த முரட்டு தொடையை தூக்குனீங்க பாருங்க பூனம்.., வேர்த்து விறுவிறுத்து போன ரசிகர்கள்!!

தேவையான பொருட்கள்:

எலும்பு நீக்கிய சிக்கன் – 1/2 கிலோ

பச்சை மிளகாய் – 4

பொட்டுக் கடலை – 1/4 கப்

மிளகாய் தூள் -1

மல்லி தூள் – 1

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 2

பட்டை,கிராம்பு – 2

இஞ்சி, பூண்டு – சிறிது

தேங்காய் துருவல் – 1/4 கப்

உப்பு – தே.அளவு

காரைக்குடி சிக்கன் கோலா உருண்டை குழம்பு - ஒரு தட்டு சோறும் ஒரு நிமிடத்தில் காலியாகும்!!
காரைக்குடி சிக்கன் கோலா உருண்டை குழம்பு – ஒரு தட்டு சோறும் ஒரு நிமிடத்தில் காலியாகும்!!

செய்முறை:

முதலில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, தேங்காய் துருவல், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும். பின்னர் கோலா உருண்டை பிடிக்க சிக்கன், வெங்காயம், பச்சை மிளகாய், பொட்டுக் கடலை, உப்பு சேர்த்து சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து சிறு சிறு உருண்டையாக பிடித்து கொள்ளவும்.

இப்போது கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு போட்டு பொரிந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து பின்னர் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து அதனுடன் நாம் முதலில் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும்.

கொதி வந்ததும் பிடித்து வைத்த கோலா உருண்டைகளை அதில் போடவும். சிறிது நேரம் கழித்து சிக்கன் கோலா உருண்டை வெந்ததும் கொத்த மல்லி தூவி அடுப்பை அணைக்கவும். தற்போது சூடான காரைக்குடி பேமஸ் சிக்கன் கோலா உருண்டை குழம்பு தயார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here