உருமாறிய கப்பா ரக கொரோனா வைரஸ் – ராஜஸ்தானில் 11 பேருக்கு தொற்று உறுதி!!!

0
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை எந்த நாளில் உச்சம் தொட்டது தெரியுமா?? சற்றுமுன் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்!!!

டெல்டா, டெல்டா பிளஸ் என உருமாறிய கொரோனா தற்போது மேலும் உருமாற்றம் ஆகி கப்பா ரக வைரஸாக மாறியுள்ளது. இந்த தொற்று ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது 11 பேருக்கு உறுதி ஆகியுள்ளது.

கொரோனா தொற்று, ஆல்ஃபா, டெல்டா, டெல்டா பிளஸ் என வெவ்வேறு விதமாக உருமாறி பீதியை கிளப்பி வருகிறது. இதில் இந்த டெல்டா ரக கொரோனா பிற உருமாற்றம் அடைந்த கொரோனவை காட்டிலும் வீரியமும், பரவல் வேகமும் அதிகம் உள்ளது என நிபுணர்கள் எச்சரித்தனர். இந்த வகை கொரோனா இந்தியாவில் இரண்டாம் அலையை ஏற்படுத்தி பாடாய் படுத்தி வருகிறது.தற்போது மேலும் உருமாறிய கப்பா ரக கொரோனா வைரஸ் ராஜஸ்தானில் 11 பேருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் சுகாதார துறை அமைச்சர் ரகு சர்மா கூறும்போது, “தொற்று பாதித்த 11 பேரில், எட்டு பேர் ஆல்வார் மற்றும் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள், மீதம் உள்ளவர்கள் பார்மர் மற்றும் பில்வாராவைச் சேர்ந்தவர்கள் என்றும், கோவிட்-19 இன் டெல்டா மாறுபாட்டுடன் ஒப்பிடும்போது கப்பா ரக வைரஸ் வீரியம் குறைவானது” என்று கூறியுள்ளார்.

கோவிட்-19 ஐ எதிர்த்து போராடுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 13 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு!!!

இதற்கு முன்பு ஏற்கனவே உத்தர பிரதேசத்தில் 2 பேருக்கு கப்பா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அம்மாநில தலைநகர் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியில் கொரோனா சிகிச்சை பெற்றவர்கள் இருவரின் மாதிரிகளை மரபணு சோதனைக்கு உட்படுத்தும்போது கப்பா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here