“நூறாண்டுக்கு ஒரு முறை தான் இப்படி ஒரு வீரரை பார்க்க முடியும்” – கபில்தேவ் புகழாரம்!!

0
"நூறாண்டுக்கு ஒரு முறை தான் இப்படி ஒரு வீரரை பார்க்க முடியும்" - கபில்தேவ் புகழாரம்!!

இந்திய அணியின் 360 டிகிரி நாயகன் சூர்யகுமார் யாதவை, வெற்றி கேப்டனான கபில்தேவ் பாராட்டி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ்:

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் இருந்தனர். தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் இந்திய அணி சூர்யகுமாரின் அதிரடியால் 91 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டியில், சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரி 9 சிக்ஸர் உட்பட 112* ரன்கள் அடித்து அசத்தி இருந்தார். இதன் மூலம், இந்த புத்தாண்டின் முதல் சதம் அடித்த இந்திய வீரரானார். இவரது இந்த ஆட்டத்தை பார்த்த முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டி வருகின்றனர். இந்த வகையில், இந்திய அணியின் வெற்றி கேப்டனாக கபில் தேவ், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரரை நூறாண்டுக்கு ஒரு முறை தான் பார்க்க முடியும் என்று கூறியுள்ளார்.

IND vs SL 1st ODI: யார் யாருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு…, முழு விவரம் உள்ளே!!

மேலும், ஏ டி வில்லியர்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின், விராட் கோலி, ரிக்கி பாண்டிங் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களை பார்த்திருக்கிறேன் என்று கூறிய இவர், சூர்யகுமார் யாதவ் கிளீன்னாக பந்தை அடிக்கிறார் என பாராட்டியுள்ளார். இதனை தொடர்ந்து, சூர்யகுமார் பந்து அடிக்கும் முறையையும் பற்றி கபில்தேவ் பாராட்டி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here