சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம்…, தமிழக முதல்வர் அறிவிப்பு!!

0
சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம்..., தமிழக முதல்வர் அறிவிப்பு!!
சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம்..., தமிழக முதல்வர் அறிவிப்பு!!

தற்போதைய அவசர உலகத்தில், சாலை விபத்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், விபத்துகள் கட்டுப்படுத்தப்பட்டதே தவிர, முற்றிலுமாக தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டு தான் வருகிறது. இந்த வகையில், தான் இன்று (மே 12) கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தும் நான்கு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவில் சென்ற நான்கு சக்கர வாகனமும், அதற்கு எதிர் திசையில் நாகர்கோவிலில் இருந்து ரோஸ்மியாபுரம் சென்ற பேருந்தும் மோதி கொண்டுள்ளன. இந்த விபத்தில், அஜித் (22), அபிஷேக் (22), கண்ணன்(23) மற்றும் சதீஷ்(37) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் (6 பேர்) அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SSC-CHSL போட்டி தேர்வர்கள் கவனத்திற்கு.., உங்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு!!!

இந்த விபத்து குறித்து அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். இத்துடன், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சமும், படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்றுவரும் 6 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here