நாங்க அப்பவே அப்படி… பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் ஐஸ்வரியாவின் ஓபன் டாக்!!!

0

விஜய் டிவியின் TRP ரேட்டிங்கில் டாப்பில் இருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கண்ணாக சரவண விக்ரம் அவர்கள் நடித்து வருகிறார். இவர் தன்னுடன் அந்த சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்து வந்த விஜே தீபிகா உடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இன்ஸ்டாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

நாங்க அப்பவே அப்படி... பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் ஐஸ்வரியாவின் ஓபன் டாக்!!!
நாங்க அப்பவே அப்படி… பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் ஐஸ்வரியாவின் ஓபன் டாக்!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பலசரக்கு சாமான்களை விற்கும் மளிகை கடையை நடத்தி வரும், மூர்த்தி, ஜீவா, கதிர் மற்றும் கண்ணன் அவர்களின் குடும்பத்தை மையமாக வைத்து இந்த சீரியலின் கதை நகர்கிறது. இந்த குடும்பம் ஒரு சில குட்டி குட்டி பிரச்சனைகளை சந்தித்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்நிலையில் எப்பொழுது ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரம் நுழைந்ததோ அன்று தொடங்கியது சீரியலில் கஷ்டமும் கவலையும்.

நாங்க அப்பவே அப்படி... பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் ஐஸ்வரியாவின் ஓபன் டாக்!!!
நாங்க அப்பவே அப்படி… பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் ஐஸ்வரியாவின் ஓபன் டாக்!!!

அதாவது வீட்டின் செல்லப் பிள்ளையாக வளர்க்கபட்ட கடைக்குட்டி கண்ணன் ஐஸ்வர்யா மீது காதலில் விழுந்தார். அதன் பின்னர் கண்ணன் அவருக்காக வீட்டில் இருந்து பணத்தை திருடுவது உள்ளிட்ட பல வேலைகளை வீட்டிற்கு தெரியாமல் செய்து வந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் ஏற்பாடு செய்ததையடுத்து செய்வதறியாமல் இருந்தனர் ஐஸ்வர்யா மற்றும் கண்ணன். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.

இதனால் இவர்கள் மட்டுமின்றி குடும்பம் முழுவதும் கவலையில் இருந்தது. மேலும் இதன் விளைவாக ஏற்பட்ட மனஅழுத்தத்தின் காரணமாக அவரின் அம்மா லட்சுமி உயிர் இழந்தார். இவ்வாறு கதை முழுவதும் சோகமாக போய் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதில் ஐஸ்வர்யாவாக நடித்து வந்த விஜே தீபிகா ஒரு சில தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக அந்த சீரியல் விட்டு விலக்கப்பட்டார்.

இதையடுத்து தற்போது ஐஸ்வர்யாவாக ஈரமான ரோஜாவே உள்ளிட்ட ஒரு சில விஜய் டிவி சீரியல்களில் நடித்த சாய் காயத்திரி நடித்து வருகிறார். இந்நிலையில் விஜே தீபிகா மற்றும் சரவண விக்ரம் இருவரும் சேர்ந்து செய்யும் ரீல்ஸ்கள் இணையத்தில் ட்ரெண்டான ஒன்று. அந்த வகையில் தற்போது இவர்கள் இருவரும் சிறுத்தை படத்தில் இடம்பெற்ற ஜிந்தாதக் தக்… என தொடங்கும் பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளனர். அவர்களின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here