கட்டுனா உங்கள மாதிரி பொண்ண தான் கட்டணும்…!பேரழகியாக ரசிகர்களை கவர்ந்த கண்ணம்மா!!!

0

விஜய் டிவியில் மிக விறுவிறுப்பாக நொடிக்கு நொடி பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி  வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த கதையின் நாயகியாக  கண்ணம்மா கதாபத்திரத்தில் ரோஷினி ஹரிப்ரியன்  நடித்து வருகிறார். தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மொட்டை மாடியில் புடவையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அவரின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சொக்கி போய் உள்ளனர்.

பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் கதையின் நாயகன் பாரதியாக அருண் பிரசாத் அவர்களும், நாயகி கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வருகின்றனர். இந்த சீரியலின் தற்போதைய கதையாக வெண்பாவின் சூழ்ச்சியால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு  கண்ணம்மாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார் பாரதி. இவர்களின் இந்த இடைவெளியை மேலும் பெரிதாக்க பல சதிகளை செய்து வருகிறார் வெண்பா.

இந்நிலையில் பாரதி மற்றும் கண்ணம்மாவின் ஹேமா, லட்சுமி என்ற இரு குழந்தைகளால் அவர்கள் மீண்டும் இணைவது போல் கதை நகர்கிறது. அதாவது உடல் நல குறைவால் சமையல் அம்மாவாக அறியப்படும் கண்ணம்மா உடன் இருக்க விரும்பும் ஹேமாவிற்காக பாரதியும் கண்ணம்மாவின் வீட்டிற்கு செல்கிறார். இப்படியாக கதை சென்று கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் இந்த கதையின் நாயகி கண்ணம்மா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மொட்டை மாடியில் சிவப்பு மற்றும் நீல நிற புடவையில் பேரழகியாக ஜொலிக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here