சினிமாவில் உணர்வு பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்திய காந்தாரா.., விரைவில் part 2 ஷூட்டிங் தொடக்கம்!!!

0
சினிமாவில் உணர்வு பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்திய காந்தாரா.., விரைவில் part 2 ஷூட்டிங் தொடக்கம்!!!
சினிமாவில் உணர்வு பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்திய காந்தாரா.., விரைவில் part 2 ஷூட்டிங் தொடக்கம்!!!

கன்னட சினிமாவில் முன்னணி இயக்குனராக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரிஷப் செட்டி தற்போது நடிகர் அவதாரத்தை எடுத்துள்ளார். அதாவது இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காந்தாரா’ திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வந்து மக்கள் மத்தியில் எதிர்பாராத அளவிற்கு வரவேற்பு பெற்றது. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பழ மொழிகளில் வெளியாகி சினிமா துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டில் குறைந்த பட்ஜெட்டில் அதிக அளவு வசூலை தட்டிச்சென்ற படமாக கருதப்படுகிறது. மேலும் இப்படம் பல தரப்பினரால் சர்ச்சைக்குள் உட்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்படம் அதை எல்லாம் மீறி தடைகளை உடைத்து தற்போது ஒரு சிறந்த கருத்துமிக்க படம் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

ஹோட்டல் ஸ்டைல் அவதி சிக்கன்.., இந்த டேஸ்ட்ல சமைச்சு பாருங்க.., கொஞ்சம் கூட மிச்சமே இருக்காது!!!

இப்படி ஏகப்பட்ட நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்துள்ளது. இதனால் இதன் இயக்குனர் ரிஷப் செட்டி இதற்கான முழுவீச்சில் இறங்கி இதன் கதையை எழுதி வருகிறார்.மேலும் இப்படம் வரும் ஜூன் மாதம் தொடங்கி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here