பாதுகாப்பு வளையத்திற்குள் நடிகர் புனீத்தின் மருத்துவர் வீடு – பரபரப்பின் உச்சத்தில் மாநிலம்!!

0

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவை தொடர்ந்து, அவரது குடும்ப மருத்துவரின் வீடு மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு:

கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகராக விளங்கியவர் நடிகர் புனித் ராஜ்குமார்.  இவர், கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பு  காரணமாக காலமானார்.  இவரது இந்த திடீர் மறைவு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கலங்க செய்தது.  இதனை அடுத்து, அவரது  மறைவை கேட்டு ரசிகர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அரங்கேறி வந்தன.

இந்த நிலையில், தீவிர  உடற்பயிற்சியாளர் மற்றும் உணவில் பயங்கர கட்டுப்பாடு வைத்திருந்த இவருக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பே இல்லை எனவும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இத்தனை அடுத்து, புனீத்தின் குடும்ப மருத்துவர் வீடு மற்றும் அவரது மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here