இத மட்டும் செய்யாதீங்க – புனித் ராஜ்குமார் அண்ணன் ரசிகர்களிடம் வேண்டுகோள்!!

0

புகழ் பெற்ற கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவை தாங்க முடியாத ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தனக்கு வேதனையை ஏற்படுத்தியதாக அவரது அண்ணன் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களுக்கு வேண்டுகோள்:

கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகராக உள்ள புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.  அவரது திடீர் மறைவை கேள்விப்பட்ட ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.  அது மட்டுமல்லாமல், அவரது மறைவை கேட்டு மூன்று ரசிகர்கள் உயிரிழந்ததாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டது.  இது குறித்து, பேட்டியளித்த நடிகர் புனித்தின் அண்ணன் சிவராஜ்குமார், எனது தம்பியின் இழப்பு, எனது மகனின் இழப்பு போன்று தோன்றுகிறது.

அவரது இறுதி சடங்கில் சிறப்பான பாதுகாப்பு ஏற்படுத்தி தந்த கர்நாடக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக அறிவித்தார்.  மேலும், ரசிகர்கள் உயிரை மாய்த்து கொள்ளும் தவறான எண்ணத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.  நடிகரின் இறுதி சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடந்தது குறிப்பிடத் தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here