இறந்தும் முன்னுதாரணமாக திகழும் நடிகர் புனித் ராஜ்குமார் – செய்தி கேட்டு கண் கலங்கி போன ரசிகர்கள்!!

0

நடிகர் புனித் ராஜ்குமார் மறைந்து 15 நாட்களில் சுமார் 8000 க்கும் அதிகமான நபர்கள் கண்தானம் செய்துள்ளதாக டாக்டர். ராஜ்குமார் கண் வங்கி தெரிவித்துள்ளது.

மறைந்தும் வாழும் நடிகர்:

கன்னடத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக விளங்கிய நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார்.ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவம், பல ரசிகர்களின் இதயத்தை சுக்குநூறாக உடைத்தெறிந்தது.  கண் தானத்திற்கு பிறகு, அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இறந்த போது அவர் செய்த சேவை தற்போது மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவர் இறந்த 15 நாட்களில்  சுமார் 8 ஆயிரத்துக்கும் அதிகமான நபர்கள் கண்தானம் செய்துள்ளதாக டாக்டர் ராஜ்குமார் கண் வங்கி தெரிவித்துள்ளது. இறந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்திய  இந்த மாபெரும் நடிகர் இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் தன் கொள்கைகளால் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here