கனியாமூர் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை – லவ் டார்ச்சர் கொடுத்து சித்ரவதை! போக்சோவில் கைது!!

0
கனியாமூர் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை - லவ் டார்ச்சர் கொடுத்து சித்ரவதை! போக்சோவில் கைது!!
கனியாமூர் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை - லவ் டார்ச்சர் கொடுத்து சித்ரவதை! போக்சோவில் கைது!!

கனியாமூர் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு, அதே பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞன் லவ் டார்ச்சர் கொடுத்ததால், அவர் அதிரடியாக போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி மாணவிக்கு கொடுமை:

கள்ளக்குறிச்சி மாவட்டம்,, சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் 12ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கணபதி என்பவரது மகன் செல்வம், அந்தப் பெண்ணுக்கு லவ் டார்ச்சர் கொடுத்து வந்தார். மாணவி தினமும் பள்ளிக்கு செல்லும் வழியில் அவரை வழிமறித்து பிரச்சினை செய்து வந்துள்ளார்.

இதனால் பொறுமை இழந்த மாணவியின் தந்தை, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். மாணவியின் தந்தை புகாரின் பேரில், 21 வயதான செல்வத்தை போலீசார் போக்சோவில் கைது செய்து நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பெயரில், தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கள்ளக்குறிச்சி பகுதியில் மாணவி ஸ்ரீமதி இறந்த சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் அந்தப் பகுதியில் இன்னொரு இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here