உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி படித்த பள்ளி மீண்டும் திறப்பு., வகுப்புகளை தொடங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!

0
உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி படித்த பள்ளி மீண்டும் திறப்பு., வகுப்புகளை தொடங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!
உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி படித்த பள்ளி மீண்டும் திறப்பு., வகுப்புகளை தொடங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!

கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்த, மாணவி ஸ்ரீமதி இறந்த நிலையில் மீண்டும் அந்தப் பள்ளியில் நேரடி வகுப்புகளை தொடங்க ஒரு மாதத்திற்கு பின், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் திறப்பு:

சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது இறப்பில் மர்மம் நீடிப்பதாக அவரது தாய் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட சில ஆசிரியர்களை காவல்துறை கைது செய்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அண்மையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பள்ளி நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளைத் தொடங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., நவம்பர் 23ல் கலைத்திருவிழா.., வின் செய்தவர்களுக்கு காத்திருக்கும் பரிசு!!

முதலில் மேல்நிலை வகுப்புகளை தொடங்கிய பின்னர் படிப்படியாக, அடுத்த வகுப்புகளும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு மாதம் கழித்து நேரடி வகுப்புகள் தொடங்கப்படுவதால், பள்ளிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here