அம்மாவான நடிகையை விடாது துரத்தும் மூத்த நடிகர்கள்…!பொறாமையில் பொங்கும் இளம் நாயகிகள்!!! 

0

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கனிகா. இவர் தற்போது மலையாளத்தில் பல மூத்த முன்னணி நடிகர்களின்  படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு குழந்தைக்கு அம்மாவான பிறகும் கூட  மார்க்கெட் குறையாமல் பல முன்னணி நடிகர்களின் படங்களை தன் கைவசம் வைத்துக் கொண்டு இளம் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் உள்ளார்.

தமிழ் சினிமா துறை மூலம் திரையுலகிற்கு வந்தவர் நடிகை கனிகா. இவரின் முதல் படம் அந்த அளவிற்கு அவருக்கு பெயரை பெற்று தரவில்லை. அந்த பின்னர் இவர் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பினார். தமிழில் இவரை நன்கு  அறிய வைத்த படம் ஆட்டோ கிராப் படம் தான். அந்த படத்தில் ஒரு சில மணிநேரம் மட்டுமே இருக்கும் காட்சியாக இருந்தாலும் இந்த படம் அவருக்கு ஒரு நல்ல இடத்தை தந்தது. அதன் பிறகும் கூட அவருக்கு தமிழில் அந்த அளவிற்கு மவுசு இல்லாமல் போனது.

ஆனால் மலையாளத்தில் அம்மணி பல படங்களில் நடித்து மலையாள திரையுலகில் ஒரு ரவுண்டு வந்தார். இருப்பினும் இவர், ஒரு முன்னணி நடிகையாக இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஈடுபட தொடங்கினார். தற்போது இவர் மீண்டும் திரைத்துறை பக்கம் திரும்பி உள்ளார். ஐந்து வருட இடைவெளியாக இருந்தாலும் கூட அம்மணியின் மவுசு  இன்னும் குறையவில்லை. அதாவது மலையாளத்தில் மூத்த பிரபல நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி உள்ளிட்டோர் படங்களில் கனிகா கண்டிப்பாக இடம் பெற்று விடுகிறார்.

அதாவது ஒரு சில வருடங்களுக்கு முன்பு வெளியான மம்முட்டியின் மாமாங்கம் படத்தில் கனிகா ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் அவருக்கு கிடைத்த மவுஸால் கனிகா தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் கமிட்டாக தொடங்கினார். அந்த வகையில் தற்போது சுரேஷ் கோபியின் பாப்பன் படத்தில் அவருக்கு ஜோடியாகவும், மோகன்லாலின் ப்ரோ டாடி படத்திலும் நடித்து வருகிறார். இதன் மூலம் அவர் மூத்த முன்னணி நடிகர்களின் விருப்ப நாயகியாக மாறி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here