தாலியை வைத்து ஒருவரை இழிவு படுத்துவது தவறு… ரசிகர்களின் கேள்விக்கு பளிச்சென்று பதிலளித்த குக் வித் கோமாளி கனி!!!

0

விஜய் டிவியின் சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர் கனி. இவர் தற்போது லைவ் சாட்டின் போது ரசிகர்கள் கேட்ட தாலி பற்றிய கேள்விக்கு நச்சுனு ஒரு பதிலடி கொடுத்து உள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி கனி அவர்கள் காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை உள்ளிட்ட படங்களை இயக்கிய வெற்றி பட இயக்குனர் அகத்தியனின் மூன்று மகள்களில் ஒருவராவார். இவர் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் இவரின் கணவர் திரு ஒரு திரைப்பட இயக்குனர் ஆவார். திரு, தீராத விளையாட்டு பிள்ளை,சமர் போன்ற படங்களை இயக்கியவர்.

மேலும் இவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த புகழ் பெற்றவர். மேலும் அந்த நிகழ்ச்சிக்கான டைட்டில் வின்னர் பட்டத்தையும் பெற்று உள்ளார்.கனி அவர்கள்  ஒரு யூ டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்த சேனலில் லைவ் சாட் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடினார்.

அந்த உரையாடலின் போது ரசிகர்கள் ஒரு சிலர் ஏன் நீங்கள் தாலி அணிவதில்லை என்ற கேள்விக்கு பளீரென்று ஒரு பதிலை அளித்து உள்ளார். அதாவது தாலி அணிவது தமிழர்கள் மரபில்லை. திருமணத்தின் போது கட்டப்பட்ட மஞ்சள் கயிற்றாலான தாலி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

அதன் பிறகு வேறு ஒருவர் அந்த தாலியை மாற்றி கட்டியது எனக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் தாலி அணிவதில்லை என கூறியுள்ளார். மேலும் தன் கணவன் திருமணத்தின் போது கட்டிய தாலியை பத்திரமாக வைத்திருப்பதாகவும், தாலி அணிவது வைத்து ஒருவரின் குணத்தை இழிவுபடுத்த கூடாது.

எங்களின் எட்டு வருட காதல் மற்றும் பன்னிரண்டு வருட அன்பான வாழ்க்கைக்கு சான்றாக அழகான இரு குழந்தைகள் உள்ளனர். இதை விட வேறு என்ன அடையாளம் வேண்டும்  என கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு தாலி பற்றி அவரின் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு கனி  கொடுத்த நச் பதில் வீடியோ தற்போது படு வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Kani Thiru (@kanithiru10)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here