புதிய சாதனை பட்டியலில் இணைந்த கேன் வில்லியம்சன்…, முதல் நியூசிலாந்து வீரரும் இவரே!!

0
புதிய சாதனை பட்டியலில் இணைந்த கேன் வில்லியம்சன்..., முதல் நியூசிலாந்து வீரரும் இவரே!!
புதிய சாதனை பட்டியலில் இணைந்த கேன் வில்லியம்சன்..., முதல் நியூசிலாந்து வீரரும் இவரே!!

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது டிராவில் முடிந்தது. இதையடுத்து 2வது டெஸ்ட் போட்டியானது, கடந்த 2ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 449 ரன்களை எடுத்திருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 408 ரன்களுக்குள் சுருண்டது. இதனால், 41 ரன்கள் முன்னிலை பெற்று நியூசிலாந்து அணி, 2வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இதில், நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் 41 ரன்களில் வெளியேறினார். இதன் மூலம் வில்லியம்சன் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

8 வருடங்களுக்கு பிறகு ஆண் குழந்தைக்கு பெற்றோரான விஜய் டிவி பிரபலங்கள்.. குவியும் வாழ்த்துகள்!!

அதாவது, டெஸ்ட் அரங்கில் 3 வது வீரராக 137 இன்னிங்ஸில் களமிறங்கி 7000 ரன்களை எட்டி உள்ளார். இதன் மூலம், சர்வதேச அளவில் இந்த சாதனையை படைத்த 5 வது வீரரானார். இதற்கு முன், இலங்கையின் குமார் சங்கக்கார(11679), இந்தியாவின் ராகுல் டிராவிட் (10524), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (9904), ஹாஷிம் அம்லா (7993) இந்த சாதனையை படைத்துள்ளனர். கேன் வில்லியம்சன், ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் 150 இன்னிங்ஸில் 7645 ரன்களை எடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here