உலக கோப்பைக்கு தயாராகும் கேன் வில்லியம்சன்…, 4 மாதங்களுக்கு பிறகு பேட்டிங் பயிற்சியில் ஈடுபாடு!!

0
உலக கோப்பைக்கு தயாராகும் கேன் வில்லியம்சன்..., 4 மாதங்களுக்கு பிறகு பேட்டிங் பயிற்சியில் ஈடுபாடு!!
உலக கோப்பைக்கு தயாராகும் கேன் வில்லியம்சன்..., 4 மாதங்களுக்கு பிறகு பேட்டிங் பயிற்சியில் ஈடுபாடு!!

நியூசிலாந்து அணியின் கேப்டனும் முன்னணி நட்சத்திர வீரருமான கேன் வில்லியம்சன் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் போட்டியின் (மார்ச் 31) போது முழங்காலில் பலத்த காயம் அடைந்தார். இதனால், ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய கேன் வில்லியம்சன் நியூசிலாந்துக்கு சென்றார். அங்கு முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு தகுந்த அறுவை சிகிச்சையை கடந்த ஏப்ரல் மாதம் செய்து கொண்டார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதற்கிடையில், எதிர்வரும் 50 ஓவர் உலக கோப்பையில் கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணியின் வழிகாட்டியாக மட்டுமே செயல்படுவார் என தகவல் வெளியாகியது. ஆனால், கேன் வில்லியம்சன் இதனை எல்லாம் கண்டு கொள்ளாமல் காயங்களில் இருந்து மீள்வதற்கான முயற்சியை மட்டுமே கடந்த 4 மாதங்களாக எடுத்து வந்தார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேட்டிங்கான வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதை பகிர்ந்துள்ளார். இதன் மூலம், 50 ஓவர் உலக கோப்பைக்குள் கேன் வில்லியம்சன் முழு உடற் தகுதி பெற்று அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Kane Williamson (@kane_s_w)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here