காயங்களில் இருந்து மீண்ட கேன் வில்லியம்சன்…, உலக கோப்பை தொடரில் இடம் பெறுவது உறுதி??

0
காயங்களில் இருந்து மீண்ட கேன் வில்லியம்சன்..., உலக கோப்பை தொடரில் இடம் பெறுவது உறுதி??
காயங்களில் இருந்து மீண்ட கேன் வில்லியம்சன்..., உலக கோப்பை தொடரில் இடம் பெறுவது உறுதி??

அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடருக்காக, சர்வதேச அணிகள் அனைத்தும் மற்ற அணிகளுக்கு எதிராக இரு தரப்பு தொடர்களை விளையாடி பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்த மாதங்களில் காயங்கள் காரணமாக ஓய்வில் இருந்த வீரர்கள் பலர், இந்த உலக கோப்பை தொடரை மையமாக கொண்டே, காயத்தில் இருந்து மீண்டு வர முயற்சித்து வருகின்றனர். இந்த வகையில், நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே தனது முழங்காலில் பலத்த காயம் அடைந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால், ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய இவர் உடனேயே காயத்திற்கு தகுந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது இந்த காயத்திலிருந்து மீண்டுள்ள இவர், அவ்வப்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இந்நிலையில், இவர் நியூசிலாந்து அணி வீரர்களுடன் களத்தில் பயிற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், உலக கோப்பை தொடருக்கான அணியில் கேன் வில்லியம்சன் கட்டாயம் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிப் போட்டியை எதிர்நோக்கி இந்திய அணி…, ஆசிய சாம்பியன்ஷிப் கனவு பழிக்குமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here