ஊரே மணக்கும்., கணவாய் மீன் வறுவல்.., இந்த மாதிரி ஒரு தடவை சமைத்து பாருங்க., சுவை அள்ளும்!!

0
ஊரே மணக்கும்., கணவாய் மீன் வறுவல்.., இந்த மாதிரி ஒரு தடவை சமைத்து பாருங்க., சுவை அள்ளும்!!
ஊரே மணக்கும்., கணவாய் மீன் வறுவல்.., இந்த மாதிரி ஒரு தடவை சமைத்து பாருங்க., சுவை அள்ளும்!!

பொதுவாக அசைவப் பிரியர்களுக்கு விதவிதமான நான்வெஜ் உணவுகளை ருசியாக சமைத்து சாப்பிட ஆசைப்படுவார்கள். அவர்களை குஷிப்படுத்தும் விதத்தில், இன்னைக்கு நாம் பார்க்க போவது கணவாய் மீன் ரெசிபி தான். அப்படி சுவைக்கு சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த கணவாய் மீன் ரெசிபியை சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தேவையான பொருட்கள்

  1. கணவாய் மீன் – 1/2 கிலோ
  2. மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  3. மஞ்சள் தூள் – 3/4 டீஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  5. மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
  6. எண்ணெய் – தேவையான அளவு
  7. உப்பு – தேவையான அளவு
  8. சிக்கன் மசாலா பொடி – 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

கணவாய் மீன் வறுவல் ரெசிபி சமைப்பதற்கு நாம் வாங்கி வைத்துள்ள மீனை நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இப்போது இதை ஒரு பவுலில் போட்டு கொள்ளவும். பிறகு இதில் 1 டீஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிக்கன் பொடி,மிளகு தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக கிளறி விட்டு கொள்ளவும்.

TNUSRB SI போட்டித் தேர்வர்களே., இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க??

இப்போது ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடானவுடன் மசாலா சேர்த்து வைத்துள்ள கணவாய் மீனை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். சுவையும், மணமும் நிறைந்த ருசியான கணவாய் மீன் வறுவல் இப்போது தயார். இந்த வாரம் sunday உங்க வீட்டுல இந்த ரெசிபியை சமைக்க மறந்துடாதீங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here