600 படங்களுக்கும் மேல் நடித்த பழம்பெரும் நடிகர் திடீர் உயிரிழப்பு – ரசிகர்கள் அஞ்சலி!!

0

சாண்டல்வுட் சினிமாவில் பழம்பெரும் மூத்த நடிகராக திகழ்பவர் நடிகர் சத்யஜித். இவரது உண்மையான பெயர் சையத் நிசாமுதீன். கன்னட திரையுலகில் சுமார் 650 படங்களுக்கு மேல் நடித்த இவர் தற்போது உடல் நலக்குறைவால் காலமாகி உள்ளார்.

கன்னடத்தில் 1983 ஆம் வருடம் வெளியான ‘அல்லா நீனே ஈஷ்வரா நீனே’ என்ற படத்தில் இவர் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் கடந்த சில வருடங்களாகவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று கொண்டிருந்தார்.

ஆனால் நேற்று அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பௌரிங் அண்ட் லேடி கர்சண் அரசு மருத்துவமனையில் உயிர் இழந்தார். இவரது இறப்புக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here