காலம் கடந்து நடிக்க வந்து இருக்கும் 80’ஸ் கனவு கன்னி – அமோக வரவேற்பை பெற்ற டீசர்!!

0

80’ஸில் அனைவருக்கும் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை அமலா. இவர் திருமணத்திற்கு பிறகு நடிக்க வரவில்லை. 30 வருடங்களுக்கு பிறகு கணம் படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மீண்டும் அமலா:

நடிகை அமலா 80’ஸ் காலத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்தார். மேலும் இவருக்கு அந்த நேரத்தில் ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து உள்ளது. பின்னர் தெலுங்கு திரை உலகை கலக்கி வந்த நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

மேலும் இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இதில் அவரின் மூத்த மகன் நாக சைதன்யா நடிகை சமந்தாவை திருமணம் செய்து சமீபத்தில் இருவருக்கும் விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை அமலா சினி உலகில் மீண்டும் ரி-என்ட்ரி கொடுத்துள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான திரைப்படம் கணம் திரைப்படத்தில் தான் அமலா ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here