புதிய அத்தியாயத்துடன் மீண்டும் கனாக்காணும் காலங்கள் – தெறிக்கவிட்ட விஜய் டிவி!!

0

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய கான்செப்ட்டில் புதிய சீரியலை களமிறக்கவுள்ளது.

விஜய் டிவி

விஜய் டிவி என்றாலே மக்களின் மிகப்பெரிய பொழுதுபோக்காக அமைய கூடிய ஒரு சேனல் தான். புது விதமாக யோசிப்பதிலும் விஜய் டிவியை அடித்து கொள்ள முடியாது. இந்த விஜய் டிவியில் 90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான சீரியல் என்றால் அது கனாகாணும் காலங்கள் தான்.

பள்ளி பருவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. பள்ளியில் ஏற்படும் சின்ன சின்ன சண்டைகள், காதல், பிரச்சனை அனைத்தையும் மையப்படுத்தி எதார்த்த கதைக்களமாக எடுக்கப்பட்டதால் ரசிகர்களுக்கு இந்த சீரியலை பார்க்க ஆர்வம் அதிகரித்தது.

இந்நிலையில் தான் தற்போது இந்த பள்ளி வாழ்க்கையை அடிப்படையாக வைத்து புதிய சீரியலை விஜய் டிவி உருவாக்கவுள்ளதாம். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் போயிக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வூஹான் ஆய்வகத்திற்கு நோபல் பரிசு கோரும் சீனா !!! – இவ்ளோ தில்லு ஆகாது !!!

இந்த அப்டேட்டை கேட்ட பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்த சீரியல் எப்பொழுது ஆரம்பிக்க உள்ளனர் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை. மீண்டும் விஜய் டிவியில் இந்த முயற்சி பற்றிய கருத்துக்களை கமண்ட் பாக்ஸில் கமன்ட் பண்ணுங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here