பல வருடங்களுக்கு பிறகு வெளிவந்த 90s கீட்ஸின் கனா காணும் காலங்கள் சீரியலின் ரகசியம்… அது என்னனு தெரியுமா???

0

அந்த காலத்தில்  மிகவும் வெற்றிகரமாக விஜய் டிவியில்  ஒளிபரப்பான  சீரியல் கனா காணும் காலங்கள். இந்த சீரியலில் சங்கவி என்ற ஒரு முக்கிய கதாபாத்திரம் ஒரு தருணத்தில் இறந்ததாக காட்சிகள் அமைக்கப்பட்டது. அந்த காட்சிகளுக்கான காரணத்தை சங்கவி கதாபாத்திரத்தில் நடித்த மோனிஷா தற்போது  தெரிவித்து உள்ளார்.

இல்லத்தரசிகளை இலக்காக கொண்டு பல சீரியல்கள் ஒளிபரப்பான காலத்தில் இளசுகளை டார்கெட்டாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல் தான் கனா காணும் காலங்கள். இந்த சீரியல் பள்ளி பருவ நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது. அதாவது அந்த வயதில் ஏற்படும் காதல், குடும்ப பிரச்சனை, சண்டைகள், காதல் தோல்வி, நண்பர்கள் பிரிவு ,வருத்தம், ஏமாற்றம் என அனைத்தையும் பிரதிபலிக்கும் ஒரு சீரியல் இது.

 

இது ஒளிபரப்பான காலத்தில் TRP ரேட்டிங்  முதல் இடத்தை தனக்கென தக்கவைத்து கொண்ட சீரியல். அந்த அளவுக்கு அதன் காட்சி அமைப்புகள் மிக விறுவிறுப்புடன் பல பரபரப்புடன் அமையப்பெற்று இருக்கும். இந்த சீரியலுக்கு பிறகு இளசுகளை அந்த அளவிற்கு கவர்ந்த சீரியல் எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் இந்த சீரியல் முடிவடைந்து 13 வருடங்கள் நிறைவுற்ற நிலையில், இந்த சீரியலின்  நடிகைகள், நடிகர்கள்  தற்போது வெள்ளித்திரை, சின்னத்திரை என ஜொலித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் இந்த சீரியலின் நடிகர்,நடிகை கலந்து கொண்ட ஒரு நெகிழ்ச்சியான கனா காணும் காலங்கள் ரீயூனியன் என்ற  நிகழ்ச்சி விஜய் டிவியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அந்த சீரியலில் சங்கவியாக நடித்த மோனிஷா கலந்து கொள்ளவில்லை. இதற்கான காரணத்தையும், சீரியலில் ஒரு கட்டத்தில் சங்கவி இறப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டதற்கான காரணத்தையும் தெரிவித்து உள்ளார்.

இது பற்றி அவர் தெரிவிக்கையில், ரீ யூனியனில் கலந்து கொள்ள எனக்கும் விருப்பம் தான். ஆனால் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே சென்னைக்கு என்னால் வர இயலும்,கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சென்னை வந்தேன். எனவே மீண்டும் என்னால் வர முடியவில்லை. அதனால் தான் கலந்து கொள்ளவில்லை.

மேலும் தான் இறந்ததாக சீரியலில் காட்டப்பட்டதற்கான காரணம் அந்த தருணத்தில் தனக்கு மெடிக்கல் கிளாஸ் தொடங்கியதால், சரிவர ஷூட்டிங் வர முடியவில்லை. எனவே தான் இவ்வாறன காட்சிகள் அமைக்கபட்டதாகவும் தெரிவித்து உள்ளார். தற்போது இவர் ஒரு மருத்துவராக உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. எத்தனை வருடங்களானாலும் கனா காணும்  காலங்கள்  சீரியல் தான் எப்பொழுதும் 90s கீட்ஸின் விருப்ப சீரியல் என்பது மறுக்கமுடியாத உண்மை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here