விஜய் டிவியில் மீண்டும் கனாக்காணும் காலங்கள் – சீரியல் குழு தேடுதல் வேட்டை!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த கனா காணும் காலங்கள் சீரியல் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. அதற்கான தேர்வு பட்டியலும் நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனாக்காணும் காலங்கள்

பள்ளி மற்றும் கல்லூரி பருவங்கள் எப்பொழுதுமே ஒருவருக்கு மிகவும் முக்கியமான காலகட்டம். மேலும் திரும்ப பெற முடியாத பொக்கிஷங்களும் கூட. அதனை கண்முன் கொண்டு வந்த சீரியல் தான் கனாக்காணும் காலங்கள்.

ஆரம்பத்திலேயே இந்த நிகழ்ச்சி நல்ல பிரபலமானது. வெள்ளித்திரை அளவிற்கு அனைவராலும் புகழப்பட்டது. பள்ளி வாழ்க்கையில் தொடங்கிய இந்த கனாக்காணும் காலங்கள் தொடர் கல்லூரி வாழ்கை வரை நீண்டது.

ஆனால் பள்ளி வாழ்கை தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இப்பொழுது இருக்கும் சீரியல்கள் போல 1000 எபிசோடுகள் எல்லாம் ஒளிபரப்பாகவில்லை. 200 எபிசோடுகளுக்குள் தான் அனைத்து சீசன்களும் ஒளிபரப்பாகி வந்தது.

தற்போது கனாக்காணும் ரீயூனியன் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் கனாக்காணும் ஒளிபரப்பாகவுள்ளது. அதற்கான ஆடிசன் நடந்து கொண்டுள்ளதாம். இந்த செய்தியை கேட்ட பலரும் உற்சாகத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here