உலக நாயகன் கமலுடன் கூட்டணி வைக்கும் வெற்றிமாறன் – சந்தோஷத்தில் ரசிகர்கள்!!!!

0
உலக நாயகன் கமலுடன் இணையும் வெற்றிமாறன் - சந்தோஷத்தில் ரசிகர்கள்!!!!
உலக நாயகன் கமலுடன் இணையும் வெற்றிமாறன் - சந்தோஷத்தில் ரசிகர்கள்!!!!

2021 தமிழக சட்டசபை தேர்தல் வேலையில் ஈடுபட்டிருந்த காரணத்தால் படத்தில நடிக்க எதுவும் ஆர்வம் காட்டவில்லை உலகநாயகன் கமலஹாசன். ஆனால் இப்பொழுது ஒரு தரமான மாஸான அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. கமல் மாற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இணைய போகிறார்களாம். இதை கேட்ட ரசிகர்கள் சந்தோசத்தின் உச்சக்கட்டத்தில் உள்ளனர்.

மீண்டும் களமிறங்கும் கமல்..

மக்கள் நீதி மையத்தின் கட்சி தலைவரும் சினிமாத்துறையின் ஜாம்பவானும் ஆன உலக நாயகன் கமலஹாசன் 2021 தமிழக தேர்தலினால் சினிமாத்துறையில் சற்று விலகி இருந்து தேர்தல் வேலைகளில் ஆர்வம் செலுத்தி வந்தார்.மீண்டும் இப்பொழுது சினிமாவில் களமிறங்கியுள்ளார். கமலுக்கு நடிப்பதில் ஆர்வம் அதிகம் தன் சிறுவயதில் இருந்தே சினிமாவிற்க்காக தன்னை அர்ப்பணித்து வருகிறார். களத்தூர் கண்ணம்மா என்னும் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார், அந்த முதல் படமே அவருக்கு நல்ல வெற்றியாக அமைந்தது அதன் பின் பல படங்களில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியுடனும் இணைந்து நடித்துள்ளார்.

மீண்டும் களமிறங்கும் கமல்..
மீண்டும் களமிறங்கும் கமல்..

இவர் சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனமும் வைத்துள்ளார். இவர் நடித்த படங்களை பல படம் பல விருதுகளும் தேசிய விருதுகளும் பெற்றுள்ளன. இப்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்னும் படத்தில் நடிக்கவுள்ளார் கமல். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரமபமாக உள்ளன. இதற்கிடையில் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கொரோன ஊரடங்கு காரணத்தால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வெற்றிமாறனுடன் இணையும் கமல்…

இந்நிலையில் ஆடுகளம், விசாரணை, பொல்லாதவன் போன்ற வெற்றி படங்களை கொடுத்த வெற்றிமாறனுடன் உலக நாயகன் இணைய போகிறாராம் என்று தகவல் வந்துள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய படங்கள் தேசிய விருதுகளை பெற்றுள்ளது. இப்பொழுது நடிகர் விஜய் சேதுபதி நடிகர் சூரி வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கிக்கொண்டுள்ளார் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து கொண்டுள்ளன. அதன் பின் நடிகர் சூர்யாவுடன் வாடிவாசல் என்னும் படத்தை இயக்க போகிறார்.

வெற்றிமாறனுடன் இணையும் கமல்...
வெற்றிமாறனுடன் இணையும் கமல்…

அதன் பின் தனுசுடன் மீண்டும் இணைந்து படம் எடுக்க போகும் வெற்றிமாறன் இப்படி அடுத்தடுத்து படங்களை இயக்குவல்ல இவர் இப்பொழுது கமலஹாசனை வைத்தும் படம் எடுக்கப்போவதாக தகவல் வந்துள்ளது.இதனை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனராம். கமலை தொடர்ந்து தளபதி விஜய்க்கும் கதை உள்ளது அவரை வைத்தும் படம் தயாரிக்கப்போவதாகா சில மாதங்கள் முன் ஹகவல்கள் கசிந்தன ஆனால் அது அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here