பிரபாஸுக்கு வில்லனாகும் உலக நாயகன்….,இந்த டிவிஸ்ட எதிர்பாக்கலையே…,

0
பிரபாஸுக்கு வில்லனாகும் உலக நாயகன்....,இந்த டிவிஸ்ட எதிர்பாக்கலையே...,
பிரபாஸுக்கு வில்லனாகும் உலக நாயகன்....,இந்த டிவிஸ்ட எதிர்பாக்கலையே...,

இன்றைய கால கட்டத்தில் சினிமா படங்களில் நடிக்கும் ஹீரோக்களுக்கு எந்த அளவு வரவேற்பு கிடைக்கிறதோ அதே அளவு வில்லன் ரோல்களில் நடிப்பவர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, ‘விக்ரம்’ படத்தில் நடிகர் சூர்யாவின் ரோலெக்ஸ் கதாப்பாத்திரம், ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் வேதா கதாப்பாத்திரம், ‘விடுதலை’ திரைப்படத்தில் வாத்தியார் போன்ற கதாப்பாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெற்றது.

இதனை கவனத்தில் கொள்ளும் நடிகர்கள் பலரும், நெகட்டிவ் கதாப்பாத்திரங்களை ஏற்று நடிக்க விரும்புகின்றனர். அந்த வகையில், நடிகர் அர்ஜுன், வினய், ஸ்ரீகாந்த் போன்றோர் இப்போது வில்லன்களாக நடித்து மக்களை என்டர்டெய்ன் செய்யத் துவங்கியுள்ளனர். இந்த வரிசையில், உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் பாலிவுட் திரைப்படம் ஒன்றில் வில்லன் அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஷாலினிக்கு முன்னாடி அந்த நடிகைக்கு பிராக்கெட் போட்ட அஜித் குமார்.., கடைசில பொண்ணு மாறியது எப்படினு தெரியுமா?

அதாவது, நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், அமிதாப் பச்சன், திஷா பதானி மற்றும் தீபிகா படுகோன் நடித்து வரும் ‘ப்ராஜக்ட் K’ என்ற திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம், கமல் ரசிகர்களுக்கு திரை விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. சுமார் 500 கோடி செலவில் தயாராகும் இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக இருப்பது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here