கின்னஸ் உலக சாதனைக்காக நடிகர் கமல் வெளியிட்ட செய்தி – சாதனை பயணத்துக்கு மனதார வாழ்த்து!!

0
கின்னஸ் உலக சாதனைக்காக நடிகர் கமல் வெளியிட்ட செய்தி - சாதனை பயணத்துக்கு மனதார வாழ்த்து!!

கடலோர காவலர்கள் நடத்திய பாய்மர படகு பயண நிகழ்ச்சியில் பங்கேற்ற 21 காவலர்கள், கின்னஸ் உலக புத்தகத்தில் இடம் பெற்றுள்ள நிலையில், அவர்களுக்கு கமல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கமல் வாழ்த்து:

தமிழக கடலோர காவலர்கள் 21 பேர் பங்கேற்ற, மரைன் போலீஸ் பாய்மர படகு பயணம் 2022 என்ற விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது. தமிழக பாதுகாப்பு குழுவுடன் ராயல் மெட்ராஸ் யாட்ச் கிளப் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி, கடந்த மாதம் 9ஆம் தேதி சென்னையில் இருந்து மண்டபம் வரை  உள்ள 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கொள்ளப்பட்டது.

மீனவ மக்களின் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சர்வதேச அளவில் நடத்தப்பட்ட, இந்த நிகழ்வினை தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கொடியசைத்து துவக்கி வைத்தார். தற்போது இந்த நிகழ்ச்சி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இது குறித்த செய்தியை வெளியிட்ட மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன், காவலர்கள் மேற்கொண்ட இந்த உலக சாதனைக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். மீனவர்களுக்கான இந்த சாதனை பயணம், மிகுந்த பாராட்டுக்குரியது என தனது வாழ்த்து செய்தியில் பதிவிட்டுள்ளார் .

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here