விக்ரம் படம் இமாலய வெற்றி – லோகேஷுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்! நெகிழ்ந்து போன இயக்குனர்!!

0

விக்ரம் படம் பிரமாண்ட வெற்றி அடைந்துள்ளதை அடுத்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு, உலக நாயகன் கமல் விலையுயர்ந்த லெக்சஸ் காரை பரிசளித்துள்ளார்.

கமல் பரிசு :

உலக நாயகன் கமல் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாகி அண்மையில் வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில், அர்ஜுன் தாஸ், சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு  கமல் நடிப்பில் வெளியான படம் விக்ரம் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரிய அளவில் காணப்பட்டது. இந்நிலையில் படம் இதுவரை, மொத்தமாக 150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டிலேயே மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் விக்ரம் தான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தனது தீவிர ரசிகரும், படத்தின் இயக்குனருமான லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு நடிகர் கமல் விலையுயர்ந்த லெக்சஸ் காரை பரிசளித்துள்ளார். இது குறித்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி பயங்கரமாக வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here